ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம், அதென்ன, 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு!'ன்னு ஒரு பழமொழி?
கொல்ற பாவம் தின்னா எப்படிப் போகும்?
யோசிச்சுப் பாத்தா சூப்பரான அர்த்தம் இந்தப் பழமொழியில பொதிஞ்சிருக்கிறது தெரிஞ்சுது.
அதாகப்பட்டது, ஒரு சிங்கம் பசியில இருக்குது. அப்ப அங்க வர்ற ஒரு மானைக் கொன்னா அதுல என்ன தப்பு?
மாமிசம்தானே சிங்கத்தோட உணவு, அதுனால பசிக்காக இன்னொரு மிருகத்தைக் கொல்றதுல தப்பு இல்லையே!
ஆனா அதே சிங்கம், வயிறு புல்லா இருக்கும்போது, அந்த வழியா போற ஒரு மானை, ச்சும்மானா அடிச்சுக் கொல்லலாமா? அது தப்புதானே!
இதான் இந்தப் பழமொழியோட விளக்கம்.
ஸ்டாப், ஸ்டாப், மனுஷப் பயலுகளுக்குத்தானே இந்தப் பழமொழின்னு நெனச்சா, இதென்னய்யா மிருகத்துக்கு விளக்கம் கொடுக்கறேன்னு உங்க மைண்ட் வாய்ஸ் சொல்லுதா? வெயிட்..வெயிட்..
மனுஷன் அசைவம்தான் சாப்பிடணும்னு இல்ல, தாராளமா சைவம் சாப்பிடலாம்ல. அப்டினா, மிருகங்களைக் கொல்றது பாவம்தான?
ஆமாம், நிச்சயம் பாவம்தான். அப்றம் எப்டி இந்தப் பழமொழி சரியாப் பொருந்தும்?
அதாகப் பட்டது, சாப்பிடறது பாவம் தான். ஆனா, சாப்பிடற ஆள் இருக்கற வைக்கும், வெட்றதுக்கு ஒரு கறிக்கடை பாய் இருக்கத்தானே செய்வார்?
( Malthus ன் Theory of Demand and Supply க்கு பக்கமா வர்ற மாதிரித் தெரியுது)
அது அவரு தொழில் இல்லையா? அதுனால அவருக்கு எப்படிப் பாவம் கணக்குல ஏறும்?
திங்கவே ஆள் இல்லாம, ஒரு ஆட்டை வெட்டினாதான் அது பாவம்.ஏன்னா அதுக்கு என்ன அவசியம், அந்த ஆட்டை துன்புறுத்தணும்கிறது மட்டும்தான், இல்லையா?
ஆகவே (கறிக்கடை பாய்) கொன்னா பாவம், (வாங்கி யாராவது) தின்னா போச்சு,( வாங்கித் தின்னவனுக்கு போய் சேந்துடும்)!
பாய், நீங்க தாராளமா வெட்டுங்க, பாவம்லாம் திங்கற பயபுள்ளங்களுக்குத்தான்!

நன்றாக உள்ளது விளக்கம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகொன்ற பாவம் தீரும் வழி: வாரியார்
ReplyDeleteமுன்னோர்களால் உணர்ந்து கூறப்பட்ட பழமொழிகள் பல இன்று திரிந்து திரிகிறது. ‘கொன்றால் பாவம் தின்றால் போயிற்று’ என்பது பழமொழி. ஆடு, கோழி போன்ற உயிர்களைக் கொன்ற பாவமானது, அவற்றைத் தின்பதால் தீர்ந்து போகும் என்பதே நம்மில் பலரும் அறிந்து வைத்திருக்கும் அர்த்தம்.
ஒரு உயிரைக் கொல்வதே பாவமாக இருக்கும்போது, அவற்றைத் தின்பதால் அந்தப் பாவம் தீர்ந்து போகுமா? என்பதை யாரும் சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
‘உண்ணாமையுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு’
என்கிறார் திருவள்ளுவர். இதற்கு மாமிசத்தை உண்பது மிகப்பெரிய பாவம் என்பது பொருள். உலகமே ஏற்றுக் கொண்டுள்ள திருக்குறளை அளித்த பொய்யாமொழிப் புலவரின் வாக்கும் கூட பொய்யாய் போகுமோ?
சரி அப்படியானால் இதன் உண்மையான கருத்துதான் என்ன என்கிறீர்களா? இதற்கு கிருபானந்த வாரியார் தனது சொற்பொழிவு ஒன்றில் கூறியதை பார்ப்போம்,
உயிர்களைக் கொன்ற பாவிகளை அவர்களின் இறப்பிற்குப் பிறகு எம தூதர்கள், நரகத்திற்குக் கொண்டு போய் கிடத்துவார்கள். அங்கு அந்தப் பாவிகளின் மாமிசத்தை அறுத்து, அவர்கள் வாயில் ஊட்டி, மாமிசத்தை உண்டவனே! உன் மாமிசத்தை நீயே சாப்பிடு’ என்று சாப்பிட வைப்பார்கள். உயிர்களை வதைத்துத் தின்ற பாவமானது, தன் சதைகளை தின்றால்தான் தீரும். இதுதான் அந்தப் பழமொழியின் உட்பொருள். அதனால் தான் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்று கூறி வைத்தார்கள்.