Tuesday, August 21, 2012

பெண் ஜன்மம்



பொறந்த வீட்டில் நெருக்கடி.
ஒத்துமையா இருந்தாலும்
ஒதுங்கி சாய இடமில்லை.
இருக்கிற சாப்பாட்டை
பங்கிட்டுதான் சாப்பிடனும்.
ஆயிரம்தான் ஆனாலும்
பொறந்த மண்ணில்லையா!
நெரந்தரமில்லாத பொறந்தவீடு
இப்பக்கூட அத நெனச்சா
மனசெல்லாம் பசுமைதான்.

புகுந்த வீடு பரவாயில்ல,
நல்லதொரு காத்தோட்டம்,
வளமான சாப்பாடு, வசதியான வாழ்க்கை.
மணி மணியாய் புள்ளங்கள
பெத்துப் போட்டு,
கூன் விழுந்த பின்னால,
அய்யய்யோ, என்ன சொல்ல,
அப்படியொரு பாடு.
காலில வெட்டுக்காயம்,
ஒடம்பெல்லாம் அடிபட்டு
வலியோட இப்போ
கொல்லையில கெடக்கேனே
என்ன சொல்லி என்ன செய்ய,
என் கதைதான் நாளைக்கு
என் பொண்ணுகளுக்கும்,
அதுக்கப்புறம் அதுக 
பொண்ணுகளுக்கும்...


அகப் பொருளும் புரிஞ்சிருக்கும்,
வெளிப் பொருளும் புரிஞ்சிருக்கும்.
சும்மா ஒரு முயற்சிதான்..
கவிஞராக முயற்சி பண்ணிட்டிருக்கோம்ல..
சும்மாவா..

No comments:

Post a Comment

படிச்சீங்களா? ஒன்னும் சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் திட்டவாவது செய்யுங்க..