தோன்றிய கவிதை
எழுதுமுன்பு மறந்ததென்று
புலம்பினானொருவன்.
எழுதியவன் நீயிருக்க
புலம்புவதேன், எழுது
மறுபடியும்...
எழுதிய கவிதைப்
புத்தகமே தொலைந்ததென்று
கதறினான் இன்னொருவன்.
உன்னிடம் போனாலென்ன,
தேடிப் பார்
மற்றவரிடம்..
கவிஞரையே
காண்வில்லையென
பதறினான் அங்கொருவன்.
ஒரு கவிஞன் போனாலென்ன
உண்டிங்கே ஆயிரம்
பேர், போடா போடா..
கவிதை படிக்கவேயிங்கு
யாருமில்லை
என்ன செய்வேன்,
பேதலித்தான் இங்கொருவன்
எழுதவும் ஆளில்லை,
படிக்கவும் ஆளில்லை
ஆகா, ஈதல்லவோ பேரமைதி
போடா, போய் தியானம்
செய்.
புண்ணியமாய்
போகட்டுமுனக்கு!
No comments:
Post a Comment
படிச்சீங்களா? ஒன்னும் சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் திட்டவாவது செய்யுங்க..