Wednesday, July 4, 2012

கடிதங்கள்


இளங்கோவன்

சோர்ந்த மனத்தின்
சொல்லம்புப் பாதைகள் ..

சோக நீர் வயலின்
வடிகால் வாய்க்கால்கள்..

பறந்து களைத்த பருந்தின்
இறக்கைப் படபடப்புகள்..

உயவிழந்த வண்டியின்
உரசல் முனகல்கள் ..

புத்தாற்று வெள்ளத்தின்
புன்சிரிப்புச் சிதறல்கள்..

உரசும் மூங்கில்களின்
உணர்ச்சிப் பொறிகள்..

அக்காக் குருவியின்
அன்புக் கதறல்கள்..
நெருப்பில் வெடிக்கும்
கொட்டாங்கச்சிச் சிதறல்கள்..

பதுங்கு நரியின்
பகல் வேஷங்கள்..

காதல் நிலவின்
கவின்மிகு ஒளிப் பொழிவுகள்..

எண்ணிலடங்கா அர்த்தம் சுமக்கும்
கடிதங்கள் முன்பெல்லாம்
அஞ்சலட்டைகளாய்..
இப்போதோ
மின்னஞ்சல்களாய்..

படத்திற்கு நன்றி: http://www.postalstationery.org/html/india_post_card_of_1902.html 

No comments:

Post a Comment

படிச்சீங்களா? ஒன்னும் சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் திட்டவாவது செய்யுங்க..